புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

முஸ்லிம் இளைஞர் மீது இந்துத்துவ வெறியன் தாக்குதல்

10 நவம்பர், 2011



ஹைதராபாத்: கடந்த 3 நாட்களாக ஹஜ்ஜுப் பெருநாளை முஸ்லிம்கள் கொண்டாடி வரும் வேலையில் ஹைதராபாத்தில் பல இடங்களில் முஸ்லிம் இளைஞர்கள் இந்துத்துவ வெறியர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவங்கள் தொடர்பாக இந்துத்துவ அமைப்பினரும் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


முஸ்லிம்கள் ஹஜ்ஜுப்பெருநாளின் போது இறைவனுக்காக குர்பானி கொடுப்பது வழக்கம். இதை பொறுத்துக்கொள்ளாததால் தான் முஸ்லிம்கள் மீது தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள் என காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர்.


ஹைதராபாத்திலுள்ள காச்சிகுடா பகுதியைச் சேர்ந்தவர் உமர் ஃபாரூக், இவரை சில மர்ம நபர்களால் அறிவாளால் கடுமையாக தாக்கி உள்ளனர். இதே போன்ற மற்றொரு சம்பவம் பொயினபள்ளி பகுதியிலும் நடந்தேறியிருக்கிறது. அதில் அப்துல கரீம், அஜீம், இத்ரீஸ் மற்றும் மெளஜம் ஆகிய நான்கு வாலிபர்கள் தாக்கப்பட்டுள்ளனர். கடுமையான தாக்குதலுக்கு ஆளான இவர்கள் அருகிலுள்ள உஸ்மானிய மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் அப்துல் கரீமின் நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இச்சம்வத்தை நேரில் பார்த்தவர்கள் காவல்துறையினரிடம் கூறும் போது சில மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிலில் வந்து கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர் எனக்கூறினர். மாநகர காவல்துறை அதிகாரி உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க உத்தரவிட்டார். புதன்கிழமை இரவு முழுவதும் விசாரணை செய்தனர்.


தாக்குதலுக்கு ஆளானவர்கள் காவல்துறையினரிடம் புகார் அளிக்கும் போது தங்களுக்கு யாருடனும் குரோதம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். எனினும் முஸ்லிம்கள் ஆடு மாடுகளை குர்பானி கொடுத்து தங்களுடைய பெருநாளை கொண்டாடியதன் காரணமாக சில இந்துத்துவவாதிகளால் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஏனெனில் நகரத்தில் சில இடங்களில் இதற்காக இந்துத்துவாவினர் முஸ்லிம்களை தாக்கியுள்ளனர்.


காவல்துறை ஆணையர் அப்துல் கையும் பத்திரிக்கையாளர்களிடம் கூறும் போது இந்துத்துவ அமைப்புகளான, பஜ்ரங்தள், வி.ஹெச்.பி, ஹிந்து வாஹினி போன்ற அமைப்புகளைச்சாரந்த 40ற்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யபட்டிருப்பதாக கூறினார்.

காவல்துறை இயக்குனர் தினேஷ் ரெட்டி உடனடியே காவல்துறை ஆணையர்களைக் கூட்டி இது தொடர்பாக‌ ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் மாநில உளவுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு பின் அப்துல் கையும் கூறும் போது தீர விசாரணை செய்து நிச்சயமாக குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010