பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்த இருக்கும் சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சார நிறைவு பொதுக்கூட்டம் கடந்த சனிக்கிழமை அன்று கோவையில் நடைபெற்றது. இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருகின்ற 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் புதுடெல்லி ராம்லீலா மைதானத்தில் "தேசத்தை நீதியால் கட்டமைப்போம்" என்ற முழக்கத்தோடு மாபெரும் சமூக நீதி மாநாட்டை நடத்த இருக்கிறது. இதன் பிரச்சாரம் நாடு முழுவதும் நடைபெற்று வந்தது. தமிழகத்தில் இதன் பிரச்சாரம் கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதி அன்று சென்னையில் ஐஸ்ஹவுஸ் பகுதியில் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் தொடங்கியது.
இதன் பின்னர் மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள், தெருமுனைக்கூட்டங்கள், சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், நோட்டீஸ் போன்றவற்றின் மூலமாக மாநாட்டின் செய்தியை கொண்டு சேர்க்கும் வகையில் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தின் நிறைவு விழா பொதுக்கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதில் மாநில தலிஅவர் ஏ.எஸ். இஸ்மாயில், மாவட்ட தலைவர் ராஜா முஹம்மது, மாநில செயற்குழு உறுப்பினர் முஹைதீன் உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக