அஹமதாபாத்: குஜராத் கலவரத்தின் போடி கலவரக்காரர்களால் இடித்து தரை மட்டமாக்கப்பட்ட எண்ணற்ற முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை புணரமைப்பதற்காக மோடி அரசு நிவாரணத்தொகை வழங்க வேண்டுமென குஜராத் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மிகப்பெரிய அளவில் மதக்கலவரம் ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் எரித்து கொலை செய்யப்பட்டனர். அவர்களின் சொத்துக்கள் கலவரக்காரர்களால் சூரையாடப்பட்டது, பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர்.
கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மோடி அரசு தான் நிவாரணத்தொகை வழங்க வேண்டுமென ஏற்கனவே நீதிமன்றம் கூறி இருந்த நிலையில், நேறைய தினம் (புதன்கிழமை) குஜராத் நீதிமன்றம் மற்றொரு தீர்ப்பையும் வழங்கியுள்ளது. அதில் மாநிலம் முழுவதும் முஸ்லிம்களின் பள்ளி வாசல்கள் இடித்து தரை மட்டமாக்கப்பட்டதற்கு முழு காரணம் மோடி அரசு என்றும் அவர்களின் அலட்சியப்போக்கினால் தான் பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்டுள்ளது என்றும் எனவே அவைகளை புரணமைப்பதற்காக மோடி அரசு நிவாரணத்தொகை வழங்க வேண்டுமென கூறியுள்ளது.

கலவரக்காரர்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட அஹமதாபத் - காந்தி நகர் மஸ்ஜித். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக முஸ்லிம்கள் வெட்டவெளியிலேயே தொழுகையை நடத்தி வருகின்றனர். |
கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மோடி அரசு தான் நிவாரணத்தொகை வழங்க வேண்டுமென ஏற்கனவே நீதிமன்றம் கூறி இருந்த நிலையில், நேறைய தினம் (புதன்கிழமை) குஜராத் நீதிமன்றம் மற்றொரு தீர்ப்பையும் வழங்கியுள்ளது. அதில் மாநிலம் முழுவதும் முஸ்லிம்களின் பள்ளி வாசல்கள் இடித்து தரை மட்டமாக்கப்பட்டதற்கு முழு காரணம் மோடி அரசு என்றும் அவர்களின் அலட்சியப்போக்கினால் தான் பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்டுள்ளது என்றும் எனவே அவைகளை புரணமைப்பதற்காக மோடி அரசு நிவாரணத்தொகை வழங்க வேண்டுமென கூறியுள்ளது.
இஸ்லாமிக் ரிலீஃப் கமிட்டி ஆஃப் குஜராத் (ஐ.ஆர்.சி.ஜி) என்ற அமைப்பு கொடுத்த மனுவின் அடிப்படையில் நீதிபதிகள் பாஸ்கர் பட்டாசார்யா, ஜே.பி. பர்திவாலா, ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்றைய தினம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
நரேந்திர மோடி அரசை கடுமையாக விமர்சித்து அவர்களின் அலட்சியப்போக்கினால் தான் கலவரம் மிகப்பெரிய அளவில் நடந்துள்ளது. முறையாக செயல்பட்டிருந்தார்களேயானால் பெரும்பாலான வணக்கஸ்தளங்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும் என்று கூறினர்.
கலவரத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளையும் சொத்துக்களையும் இழந்த மக்களுக்கு மோடி அரசு நிவாரணத்தொகை வழங்கியதை சுட்டிக்காட்டிய உயர் நீதிமன்றம் வணக்கஸ்தளங்கள் பாதிக்கப்பட்டதற்கும் அவர்களே நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. 26 மாவட்டங்களிலுள்ள நீதிமன்றங்கள் இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களிடம் விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டு 6 மாதத்திற்குள் உயர் நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என ஆணையிட்டுள்ளது.
ஐ.ஆர்.சி.ஜி இது தொடர்பான மனுவை கடந்த 2003 ஆம் வருடத்தில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மனித உரிமை அமைப்பால் பரிந்துரை செய்யப்பட்ட இந்த மனுவின் படி தற்பொது தான் குஜராத் அரசு நிவாரணத்தொகை வழங்க வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குஜராத் கலவரத்தின் போது கிட்டத்தட்ட 294 பள்ளிவாசல்கள்/ வணக்கஸ்தலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.ஆர்.சி.ஜி தெரிவித்திருக்கிறது.

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக