சென்னையில் சமூக மேம்பாட்டு துறை சார்பாக ஏழை பெண்ணிற்கு திருமண உதவி அளிக்கும் பாப்புலர் ஃப்ரண்டின் சகோதரர் சுலைமான் |
கோவை:
மருத்துவ உதவியாக ரூபாய் 32,300/- மற்றும் திருமண உதவியாக ரூபாய் 25,000/- வழங்கப்பட்டது. 4 நபர்களுக்கு முதியோர் பென்ஷன் உதவி பெற உதவி செய்யப்பட்டது.
குமரி மாவட்டம்:
குளச்சல் ஜமாத்திற்கு உட்பட்ட அப்துர்ரஹ்மான் என்பவருடைய மகன் அல் அமானுடைய எஞ்சினியரிங் படிப்பிற்காக கல்வி உதவித்தொகையாக ரூபாய் 8000/- வழங்கப்பட்டது. திங்கள் சந்தை ஜைனபா என்பவரின் மகன் அபுதாஹிருடைய மருத்துவ செலவிற்காக ரூபாய் 4500/- வழங்கப்பட்டது.
மாதவலாயத்தில் அலி அக்பர் என்பவருக்கு டயாலிஸிஸ் செய்வதற்காக ரூபாய் 3500/- கொடுக்கப்பட்டது. இங்கு ஒரு மருத்துவ முகாமும் ரூபாய் 10,662/- செலவில் நடத்தப்பட்டது.
திட்டுவிளையில் பாபு ஹுஸைன் என்பவரின் மருத்துவ செலவிற்காக ரூபாய் 1000/- கொடுக்கப்பட்டது.
சூரங்குடியில் ஆட்டோ டிரைவராக பணிசெய்யும் நெளசாத் என்பவரின் மகன் முஹம்மதுவின் எஞ்சினியரிங் படிப்பிற்காக ரூபாய் 5000/- வழங்கப்பட்டது.
நாகர்கோவில் ஜஃபருல்லாஹ் என்பவருடைய தாயார் அவர்களுக்கு பக்கவாத நோயினால் தாக்கப்பட்டதற்கு மருத்து செலவிற்காக ரூபாய் 1500/- வழங்கப்பட்டது.
பெரம்பலூர்:
ஒரு சகோதரியின் திருமணத்திற்காக ரூபாய் 3000/- வசூல் செய்தும் ரூபாய் 1500/-க்கு சேலையும் வழங்கப்பட்டது.
தேனி:
பெண்கள் கர்பப்பை தொடர்பான நோய்கள் குறித்த மருத்துவ முகாமில் 77 பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
கடையநல்லூரைச் ஒருவர் தேனி வந்து மரணித்துவிட அவருடைய ஜனாஸாவை மீண்டும் அவரது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் அவரது குடும்பத்தாருக்கு ரூபாய் 24,500/- உதவி செய்யப்பட்டது. மேலும் மருத்துவ உதவியாக ரூபாய் 2000/- வழங்கப்பட்டது.
கடலூர்:
இருதய சிகிச்சைக்காக ஒருவருக்கு ரூபாய் 1000/- வசூல் செய்து கொடுக்கப்பட்டது.
வேலூர்:
டயாலிஸிஸ் செய்வதற்காக ரூபாய் 1000/- மற்றும் திருமண உதவியாக ரூபாய் 10,000/-மும் வழங்கப்பட்டது.
திண்டுக்கல்:
கல்வி உதவித்தொகையாக ரூபாய் 500/- மற்றும் மருத்துவ உதவியாக ரூபாய் 46,000/- கொடுக்கப்பட்டது.
திருப்பூர்:
கல்வி உதவித்தொகையாக ரூபாய் 2000/- மற்றும் பொருள் உதவியாக ரூபாய் 350/- வழங்கப்பட்டது. சுமார் 150 நபர்களுக்கு மேல் முதியோர் உதவித்தொகை விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு கொடுக்கப்பட்டது. தற்போது பி.பி.எல் நம்பர் இருக்கும் நபர்களுக்கு மட்டு மிக எளிதாக முதியோர் பென்ஷன் கிடைக்கும்
சென்னை:
கல்வி உதவித்தொகையாக ரூபாய் 10,500/- மற்றும் 6 முதியவர்களுக்கு ரூபாய் 650/- உதவித் தொகை வழங்கப்பட்டது.
சிறு நீரகம் பாதிக்கப்பட்ட 2 நபர்களுக்கு ரூபாய் 6000/- வழங்கப்பட்டது.
திருமண உதவித்தொகையாக ரூபாய் 12,500/- வழங்கப்பட்டது.
விதவை பெண் ஒருவருக்கு மாதா மாதம் ரூபாய் 500/- வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
சுய தொழில் செய்யும் ஒருவருக்கும் ரூபாய் 2000/- உதவித்தொகையும் கடனாக மற்றொருவருக்கு ரூபாய் 3000/- வழங்கப்பட்டது.
தமிழக அரசு வழங்கி வரும் மிக்ஸி, கிரைண்டர் பெருவதற்கான விண்ணப்பங்கள் 400 நபர்களுக்கு பூர்த்தி செய்தி கொடுக்கப்பட்டது. 375 நபர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைக்க விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டது.
நெல்லை:
மருத்துவ உதவியாக ரூபாய் 4400/- வழங்கப்பட்டது. திருமண உதவியாக ரூபாய் 18,000/- வழங்கப்பட்டது. கல்வி உதவித் தொகையாக ரூபாய் 22,500/- வழங்கப்பட்டது. 3 தையல் மிஷின்கள் ரூபாய் 20,100/- செலவில் ஏற்பாடு செய்யப்பட்டது. பள்ளிவாசல் கட்டத்திற்காக ரூபாய் 23,500/- கொடுக்கப்பட்டது. மேலப்பாளையத்தில் ஆதரவற்ற முதியோர் ஒருவரின் ஜனாசாவை குளிப்பாட்டி அடக்கம் செய்யப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் பாப்புலர் ஃப்ரண்டின் சமூக மேம்பாட்டுத்துறையின் மூலமாக ரூபாய் 3,21,912/- அளவிற்கு உதவிகள் செய்யப்பட்டுள்ளது.
1 விமர்சனங்கள்:
தொடருங்கள் உங்கள் பணிகளை மக்கள் மன்றத்தில் நீங்கள் செய்த சிறு உதவிகளையும் தெரிவிப்பதில் தவறேதுமில்லை குறைகூருபவர்கள் கூரிக்கொண்டேதான் இருப்பார்கள் (எதுசெய்தாலும் குற்றமென) அதனை பொருட்படுத்தாமல் உங்களின் சமுதாய சேவைகள் தொடர வாழ்த்துகிறேன்.
கருத்துரையிடுக