நியுயார்க்: அமெரிக்காவில் இயங்கி வரும் "அமைதிக்கான முஸ்லிம்களின் கூட்டமைப்பு" என்ற இயக்கம் டைம்ஸ் பத்திரிக்கை குஜராத் முதலைமைச்சர் நரேந்திர மோடியை புகழ்ந்து கட்டுரை வெளியிட்டதற்காக வன்மையாக கண்டித்துள்ளது.
குஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு மாபெரும் இனப்படுகொலைக்கு காரணமாகவும் அதற்கும் மூளையாகவும் செயல்பட்டவர் நரேந்திர மோடி. அந்த இனப்படுகொலை நடைபெற்று 10 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றுவரை உரிய நிவாரணம் சென்றடையவில்லை. மேலும் அக்குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனையும் வழங்கப்படவில்லை. இத்தகைய சூழலில் அக்கலவரத்தை நினைவுகூறும் வகையில் கலவரத்தால் பாதிக்கப்பவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் என அனைத்து தரப்பிலும் நரேந்திர மோடியை கண்டிக்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்துவரும் இவ்வேளையில் டைம்ஸ் பத்திரிக்கை நரேந்திர மோடியை புகழ்ந்து கட்டுரை வெளியிட்டிருப்பது மிகவும் கண்டிக்கதக்கதாகும்.
டாக்டர் ஷேக் உபைத் இவர் இந்த முஸ்லிம் அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். இவர் குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் நரேந்திர மோடியின் பங்கை பகிரங்கமாக அமெரிக்க அரசுக்கு தெரிவித்ததன் காரணமாகவே நரேந்திர மோடிக்கு அமெரிக்க அரசு விசா வழங்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.
குஜராத் கலவரம் நடந்து முடிந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில் அதன் கொடூரங்களை இன்னும் மறக்க முடியாமல் மக்கள் தவித்து வரும் இவ்வேளையில் டைம்ஸ் பத்திரிக்கையின் இச்செயல்பாடு கண்டிக்கத்தக்கதாகு என அவர் கூறினார். டைம்ஸ் பத்திரிக்கை தன்னுடைய தவறை உணர்ந்து கொண்டு இதற்காக மன்னிப்பு கேட்பதோ மட்டுமல்லாமல் நரேந்திர மோடியின் கோர முகத்தை வெளியிட வேண்டுமென அப்பத்திரிக்கைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
குஜராத் கலவரத்தின் போது 2000ற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். நூற்றுக்கணக்கான சிறுமிகள், பெண்கள் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் எரித்து கொலை செய்யப்பட்டனர். 1,50,000ற்கும் மேற்பட்ட மக்கள் தங்களுடைய சொந்த ஊரை விட்டு வெளியேற்றப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்கள் இன்று வரை நீதிக்காக ஏங்கி வருகின்றனர். உச்ச நீதிமன்றமே நரேந்திர மோடியை குற்றஞ்சாட்டியுள்ள போதிலும் நீதி என்பது எட்டாக்கணியாகவே இருந்து வருகிறது. லட்சக்கணக்கான முஸ்லிம்களுக்கு தற்போது கல்வி, வேலை வாய்ப்பு, வாடகைக்கு வீடு ஆகியவை மறுக்கப்பட்டு வருகிறது. சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூட நரேந்திர மோடியை வன்மையாக கண்டித்துள்ளது. அமெரிக்க அரசு கடந்த 2005ஆம் ஆண்டு தனது நாட்டிற்கு வர மோடிக்கு விசா வழங்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் டைம்ஸ் பத்திரிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அவ்வமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. டைம்ஸ் பத்திரிக்கை இது தொடர்பாக உடனே மறுப்பு வெளியிட்டு நரேந்திர மோடி தொடர்பான உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.
மஹாத்மா காந்தியை கொன்ற இந்துத்துவ அமைப்புகளே பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் கொன்று குவித்துள்ளது. மோடி நடத்திய இனப்படுகொலைகளை சாதகமாக்கிக்கொண்டு வரவிருக்கின்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுவருகிறது. அத்தோடுமட்டுமல்லாமல் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்படுவார் என்ற செய்தியும் பரவி வருகிறது. மோடி தன்னுடைய குஜராத் மாநிலத்தை பொருளாதார ரீதியில் முன்னேற்றியுள்ளார் என்ற செய்திதான் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறது. அது உண்மையாக இருந்தாலும் கூட நரேந்திர மோடி மனித இனத்திற்கு எதிராக செயல்பட்ட குற்றங்களை வளர்ச்சி என்ற ஒன்றை வைத்து மறைத்துவிட முடியாது. இந்துத்துவ அமைப்பில் இருக்கும் தலைவர்கள் பலருக்கு ஹிட்லரே கதாநாயகனாக விளங்குகிறார். அப்படியானால டைம்ஸ் பத்திரிக்கை ஹிட்லரை புகழ தயாராக இருக்கிறதா? இவ்வாறு அவர் மேலும் கூறினார்.
நாம் செய்ய வேண்டியவை:
1. டைம்ஸ் பத்திரிக்கையை தொடர்பு கொண்டு நம்முடைய கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்.
2. ஒவ்வொரு நாளும் நம்முடைய நண்பர்கள் 5 பேரை டைம்ஸ் பத்திரிக்கை தொடர்பு கொள்ளச்செய்து அவர்களுடைய கண்டனத்தை பதிவு செய்ய வலியுறுத்த வேண்டும்.
3. ஜும்மா தொழுகை முடிந்த பிறகு தொழ வந்தவர்களிடத்திலும், பொதுமக்களிடத்திலும் கையெழுத்து வாங்கி அதனை அமெரிக்காவில் இயங்கி வரும் முஸ்லிம் அமைப்பு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வையுங்கள்.
நாம் டைம்ஸ் பத்திரிக்கையை நோக்கி கேட்கவேண்டியவை:

1. நரேந்திர மோடி மனித இனத்திற்கு எதிராக செய்த குற்றங்களை மறைக்க எண்ணுகின்றீர்களா?
2. 1930களில் ஹிட்லர் ஜெர்மனியின் பொருளாதாரத்தை வலுப்படுத்தினார். அதற்காக அவரை புகழ்வதற்கு டைம்ஸ் பத்திரிக்கை தயாராக இருக்கிறதா?
3. மனித உரிமைக்கு எதிராகவும், குடியுறிமைக்கு எதிராகவும் நடத்தப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் நீதியின்றி ஓரங்கப்பட்டுள்ளார்களே அவர்களுக்காக டைம்ஸ் பத்திரிக்கை குரல் கொடுக்குமா?
டைம்ஸ் பத்திரிக்கையை தொடர்பு கொள்வதற்கு:
TIME Magazine:
1-866-550-6934.
http://www.facebook.com/time
http://twitter.com/#!/time
letters@time.com
enquiries@timeasia.com
1 விமர்சனங்கள்:
yennadhaan naam katthinaalum islaatthirkku yedhiraana velaigalai avargal seidhu kondedhaan iruppaargal. Allahdhaan dhandanai kodukka vendum.
கருத்துரையிடுக