அதிமுக அரசின் மின்கட்டண உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐயின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,
அ.தி.மு.க அரசு பொறுப்பேற்றது முதல் பஸ் கட்டணம் ,பால் விலை உயர்வு என ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கடந்த நவம்பரில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் "கோரிக்கை " வைத்தது.
இதன் பின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கண்துடைப்பு கருத்துக் கேட்பு கூட்டங்களை சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் நடத்தியது. அதில் கலந்து கொண்ட பொது மக்களும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் தங்களின் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.
இந்நிலையில் நேற்று சுமார் 45 % கட்டண உயர்வை தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் இதைவிட அதிகமாகவே கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளதாகவே தெரிகிறது. இது தவிர ஒவ்வொரு நுகர்வோருக்கும் சேவைக் கட்டணம் ரூ.20/- ம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஏற்கனவே மத்திய, மாநில அரசின் கட்டண உயர்வு, வரி உயர்வு மற்றும் பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளால், விலைவாசி உயர்வால் தினறிவரும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் இந்த கட்டண உயர்வால் மேலும் அவதியுறுவர்.
தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் சுயேட்சையானது அது சுயமாகவே முடிவெடுக்கிறது என்ற முதல்வரின் அறிவிப்பு கேலிக்குரியது, தமிழக அரசு மக்கள் விரோத இந்த கட்டண உயர்வை முற்றிலும் திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமும் 10 முதல் 12 மணி நேரம் மின்வெட்டை அமுல்படுத்தி மக்களை வதைக்கும் மின்சார வாரியத்திற்கு மின்கட்டணம் ஒரு கேடா ?..என கேட்க விரும்பிகிறேன்.

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக