புதுடெல்லி: கலவரத்தால் பாதிக்கப்பட்டு குடும்பங்களையும், சொந்தங்களையும்,
உடமைகளையும் இழந்து தவிக்கின்ற அஸ்ஸாம் மக்களுக்காக பொருளாதார ரீதியாக உதவி
செய்வதற்கு அனைத்து தரப்பு மக்களும் உதவ வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட்
ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான் வேண்டுகோள்
விடுத்துள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்தில் போடோ தீவிரவாத குழுக்களால் தாக்குதல்களுக்கு ஆளாக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கி வரும் சிறுபான்மை மக்களுக்காக தன்னால் இயன்ற வரை அப்பகுதி தன்னார்வ தொண்டு அமைப்புகளுடன் இணைந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு உதவிப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.
149 நிவாரண முகாம்களில் என்னென்ன அத்தியாவசிய பொருட்கள் தேவை படுகிறது என்பதை கணக்கெடுக்கப்பட்டுள்ளது. கருத்துக்கணிப்பு குழு சீராங் - 25 முகாம், சப்பர் - 10 முகாம், பிலாசிபாரா - 55 முகாம், பொங்கைகான் - 7 முகாம், கெளரிபூர் - 25 முகாம், கொக்ரஜார் - 27 முகாம், என மொத்தம் 149 முகாம்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தொடர்பாக சர்வே எடுக்கப்பட்டது.
அஸ்ஸாம் மக்களுக்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தொண்டர்கள் ஈத் பெருநாளின் போது நிவாரண பணிகளுக்காக வசூல் செய்ய இருக்கின்றனர். இத்தருணத்தில் முஸ்லிம்கள் அனைவரும் அஸ்ஸாம் மக்களுக்காக தங்களால் இயன்ற அளவு உதவிக்கரங்களை நீட்ட வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர் அப்துர்ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய
பொதுச்செயலாளர் கே.எம். ஷரீஃப் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்களான
மெளலானா உஸ்மான் பேக் மற்றும் ஓ.எம்.ஏ ஸலாம் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை
நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும் அவர்களுக்கு தேவையான
உதவிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். மற்றொரு செயற்குழு உறுப்பினரான
முஹம்மது ஹாலித் ரஷாதி அவர்கள் அப்பகுதியில் செயல்பட்டு வரும்
நிவாரணப்பணிகளை கண்காணித்து வருகிறார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்
இந்தியாவின் தொண்டூழியர்கள் 150 பேர் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு
வருகின்றனர். மக்களுக்கு உணவு பொட்டலங்கள், மருந்துகள், துணிகள்,
போர்வைகள், வாலி, பாத்திரங்கள், கொசுபத்தி சுருள்கள், மெழுகுவர்த்திகள்
போன்றவைகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது
நிவாரண உதவியை வழங்கும் பொதுச்செயலாளர் கே.எம். ஷரீஃப் |
அஸ்ஸாம் மக்களுக்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தொண்டர்கள் ஈத் பெருநாளின் போது நிவாரண பணிகளுக்காக வசூல் செய்ய இருக்கின்றனர். இத்தருணத்தில் முஸ்லிம்கள் அனைவரும் அஸ்ஸாம் மக்களுக்காக தங்களால் இயன்ற அளவு உதவிக்கரங்களை நீட்ட வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர் அப்துர்ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக