இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் நெல்லை மாவட்ட தலைவர் அன்வர் முகைதீன் அவர்கள் தலைமை தாங்கி தலைமையுரையாற்றினார். அதனை தொடர்ந்து SDPI கட்சியின் நெல்லை மாவட்ட துணை தலைவர்களான நசீர் கான் மற்றும் சாகுல் ஹமீது உஸ்மானி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். அதனை தொடர்ந்து NCHRO வின் தேசிய செயற்குழு உறுப்பினர் அட்வகேட்.தங்கசாமி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். அவர் தனது சிறப்புரையில் " மிக குறைந்த சதவீதமுள்ள பார்ப்பனிய ஆதிக்கத்தை குறித்தும் அதை துரத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் " அழகுற எடுத்துரைத்தார்.
அடுத்ததாக கோரிக்கையுரையாற்றிய பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் செயற்குழு உறுப்பினர் பக்ருதீன் அவர்கள் " இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக சங்க்பரிவார பாசிசம் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் குறித்தும், அப்பாவி முஸ்லிம்கள் இந்தியா முழுவதிலுமுள்ள சிறைகளில் அனுபவித்துக் கொண்டிருக்ககூடிய வேதனைகள் குறித்தும், அதிகார வர்க்கம், ஆளும் அரசாங்கம், நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகள் செய்து கொண்டிருக்கக்கூடிய இரட்டை நிலைப்பாடுகள் குறித்து பல்வேறு உதாரணங்கள் மூலம் தனது கருத்தை அழகுற எழுச்சிப்பொங்க " எடுத்துரைத்தார்.
அதனை தொடர்ந்து உரை நிகழ்த்திய SDPI கட்சியின் தமிழ் மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் அவர்கள் " மேலப்பாளையம் மாநகரம் முஸ்லிம்களின் உரிமைகளை மீட்டெடுக்க குரல் கொடுக்கும் அனைத்து முஸ்லிம் அமைப்புகளையும் அரவணைத்து செல்லும் மாண்பு கொண்டது எனவும் பாப்புலர் ப்ரண்ட் கையிலெடுத்துள்ள இந்த தேசிய அளவிலான பிரசாரத்திற்கு SDPI கட்சி என்றும் துணை நிற்கும்" என்றார்.
இறுதியாக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மேலப்பாளையம் நகர தலைவர் அப்துல் லத்தீப் அவர்கள் கோரிக்கை தீர்மானம் வாசித்து நன்றியுரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் ஏர்வாடி கனி மற்றும் அவரது குழுவினர் சார்பாக கோரிக்கை பாடல் ஒன்று பாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு SDPI கட்சியின் நெல்லை மாவட்ட தலைவர் பிஸ்மி காஜா, மாவட்ட செயலாளர் ஹயத் முகம்மது, பாளை தொகுதி தலைவர் அப்துல் ஹமீது, தொகுதி செயலாளர் நஜீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக