புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

அஸ்ஸாமில் மூன்றாம் கட்ட நிவாரணப்பணிகள்

20 செப்டம்பர், 2012



குவாஹாத்தி: அஸ்ஸாமில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்ளும் பணியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேற்கொண்டு வருகிறது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதியான சீராங் மாவட்டத்தில் மூன்றாம் கட்ட நிவாரணப்பணிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா நேற்று (19.09.2012) அன்று துவக்கி வைத்தார். புதுடெல்லியை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ரிஹாப் இந்தியா தொண்டு நிறுவனத்தோடு இணைந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அஸ்ஸாமில் பல்வேறு நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.

Md Ali Jinnah - Vice Chairman, Popular Front inaugurates third phase of Assam relief works
நிவாரணப்பொருட்களை வழங்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா

நிவாரணப்பணிகளின் முதற்கட்டமாக கலவரம் நடைபெற்ற சில நாட்களிலேயே ரிஹாப் இந்தியாவின் தொண்டூழியர்கள் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரணா முகாம்களுக்கு நேரடியாக சென்று அம்மக்களுக்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை கணக்கெடுத்தனர். சீரங், பொங்கைகோன், பார்பெட்டா, கோக்ரஜார் மற்றும் தூப்ரி ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் இருப்பவர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை மேற்கொண்டனர். இரண்டாம் கட்ட நிவாரணப்பணிகளாக புதிய ஆடைகளை நோன்புப் பெருநாளை முன்னிட்டு வழங்கப்பட்டது. சுமார் 10 லட்சம் மதிப்பில் இரண்டாம் கட்ட நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

கிட்டதட்ட 129 நிவாரண முகாம்களுக்கு ரிஹாப் இந்தியாவின் தொண்டூழியர்கள் கடந்த வாரம் நேரடியாக சென்று அவர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை அறிந்தனர். கிட்டதட்ட 99,160 பேர் அம்முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதில் 6000 குழந்தைகளுக்கு உணவுகள் வழங்கப்பட வேண்டியிருந்தது. 35483 ஆண்களுக்கும் (சட்டை மற்றும் லுங்கி), 33411 பெண்களுக்கும் (புடவை, சட்டை மற்றும் சுடிதார்), 22399 சிறுவர்களுக்கும் (சட்டை மற்றும் டிரவுஸர்) ஆடைகள் வழங்கப்பட வேண்டும். வாலிகள் மற்றும் உணவு உண்பதற்கான தட்டுகள் மொத்தம் 24434 குடும்பங்களுக்கு வழங்க வேண்டும். 

சீராங் மாவட்டத்திலுள்ள 9 நிவாரண முகாம்களில் மூன்றாம் கட்ட நிவாரணப்பணிகள் நேற்று முதல் துவங்கப்பட்டது. கோரஜ்மாரி எல்.பி பள்ளிக்கூடம், கோரஜ்மாரி மதரஸா, லோகிபூர் எல்.பி பள்ளிகூடம், கவாத்திகா எல்.பி பள்ளிகூடம், கவாத்திகா எம்.இ பள்ளிக்கூடம், கவாத்திகா சிசு பர்ஸாலா, மொமோகஸா எல்.பி. பள்ளிக்கூடம், மொமோகஸா மதரஸா மற்றும் துதூரி அகாடெமி ஆகிய 9 நிவாரண முகாம்களில் உதவிகள் மேற்கொள்ளப்பட்டது. இதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா துவக்கி வைத்தார்.

ஆரிஃப் பைஜல் (செயலாளர், தமிழ் நாடு), வழக்கறிஞர் முஹம்மது யூசுஃப் (மாநில செயற்குழு உறுப்பினர், தமிழ் நாடு), அப்துல் ஹமீது, எம். அப்துல் சமது  (மாநில செயற்குழு உறுப்பினர், கேரளா), அமீனுல் ஹக், ரஃபீகுல் இஸ்லாம் (ரிஹாப் இந்தியா), ஆகியோர் நேரில் சென்று நிவாரணப்பணிகளை மேற்கொண்டனர். 1032 குடும்பங்களைச்சேர்ந்த 4654 நபர்கள் இதில் பயன் அடைந்தனர். இந்த மாத இறுதி வரை மூன்றாம் கட்ட நிவாரணப்பணிகள் தொடர்ந்து நடைபெறும்.
Assam Relief

M. Abdul Samad - SEC Member, Popular Front, Kerala

Third phase of Assam relief works

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010