புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற எஸ்.டி.பி.ஐயினர் கைது

18 அக்டோபர், 2012



சென்னை: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக் கோரி சென்னையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் தலைமை செயலகத்தை முயன்ற போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் குடியினால் பலரது குடும்பங்கள் சீரழிந்துள்ளது. மேலும் தமிழகத்தில் நடைபெறும் தீய செயல்களுக்கெல்லாம தலையாய காரணமாக அமைவது இந்த மது என்னும் மானக்கேடான விஷயம் தான். அப்பேற்பட்ட மதுவை தடைசெய்ய வேண்டிய அரசே இதனை ஏற்று நடத்துவது மக்கள் விரோத செயலாகும்.

வருமானம் அதிகளவில் கொழிக்கிறது என்ற ஓரே காரணத்திற்காக மக்களின் நலனில் அக்கறை இல்லாத தமிழக அரசின் நிலையை இது பறைசாற்றுகிறது. பூரண மதுவிலக்கை உடனடியாக தமிழகத்தில் அமுல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக கடந்த அக்டோபர் 2ஆம் தேதி முதல் தொடர் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இப்பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்று தமிழகம் தழுவிய முற்றுகை போராட்டம் நடைபெறப்போவதாக அக்கட்சி அறிவித்திருந்தது.

சென்னையில் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி தலைமையில் தலைமை செயலகத்தை முற்றுகையிடப்போவதாக செய்தி வெளியிடப்பட்டது. இதனால் காவல்துறை தரப்பிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு தலைமை செயலகத்திலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிலும் போடப்பட்டிருந்தது. இராஜாஜி சாலையில் ஆயிரக்கணக்கானவர் கூடி தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்றபோது காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.










2 விமர்சனங்கள்:

JAHIR HUSSAIN சொன்னது…

மயகத்தில் தள்ளாடும் அரசுக்கு S.D.P.I ஒரு நல்ல சந்தேற்பம் காந்தி பெறந்த நாளிலுறிந்து ஜாபகம் மூட்டியது .ஆட்சி அலேர்கள் மயகத்தில் இரூந்து விளிபர்களா அல்லது செவிடன் காதில் வூதிய சங்காய் இருபர்களா பொருத்து இரூந்து பார்போம்

JAHIR HUSSAIN சொன்னது…

மயகத்தில் தள்ளாடும் அரசுக்கு S.D.P.I ஒரு நல்ல சந்தேற்பம் காந்தி பெறந்த நாளிலுறிந்து ஜாபகம் மூட்டியது .ஆட்சி அலேர்கள் மயகத்தில் இரூந்து விளிபர்களா அல்லது செவிடன் காதில் வூதிய சங்காய் இருபர்களா பொருத்து இரூந்து பார்போம்

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010