புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

புதுடெல்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் தர்ணா போராட்டம் நடத்த முடிவு

4 டிசம்பர், 2012

புதுடெல்லி: பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 20 ஆண்டுகள் கழிந்த நிலையில் மீண்டும் அதே இடத்தின் மஸ்ஜிதை கட்டக்கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக வருகின்ற டிசம்பர் 6ல் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற இருக்கிறது.  டெல்லி ஜந்தர் மந்தரில் வைத்து நடைபெறவிருக்கும் இப்போராட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.



பாபரி மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் மீது கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்ற வலியுறுத்தலும் இப்போராட்டத்தில் இடம்பெறுகிறது. "பாபரி மஸ்ஜித் என்றும் நம் நினைவில்" என்ற வாக்கியத்தோடு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாடு முழுவது பாபரி மஸ்ஜித் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த இருக்கின்றது. சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள் என பல தரப்பட்ட வகையில் இப்பிரச்சாரம் நடைபெறவிருப்பதாக தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

463 ஆண்டு காலம் பழமைவாய்ந்த முஸ்லிம்களின் இறையில்லமான பாபரி மஸ்ஜிதை சங்கப்பரிவார ஃபாசிஸ்டுகள் இடித்து தரைமட்டமாக்கினர். தேசத்தந்தை மஹாத்மா காந்தியின் படுகொலைக்கு அடுத்தப்படியாக  சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற மிகவும் கோரமான தீவிரவாத தாக்குதல் இதுவேயாகும். உலக அரங்கில் 1992 டிசம்பர் 6 அன்றைய தினம் உலக அரங்கில் இந்தியாவிற்கு மிகவும் தலை குனிவை ஏற்படுத்திய நாள் எனபதை மறுத்துவிட முடியாது.

முஸ்லிம்களோடு இணைந்து இன்னபிற சமூக மக்களும் பாபரி மஸ்ஜிதின் நினைவை தக்கவைத்து வருகின்றனர். நீதிக்காக போராடிக்கொண்டிருக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவோடு அனைவரும் கைகோர்க்க வேண்டும் என இ.எம். அப்துர்ரஹ்மான் பத்திரிகையாளர்களுக்கு செய்தி அனுப்பியுள்ளார்.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010