புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

மோடிக்கு அமெரிக்கா செல்ல விசா வழங்கக்கூடாது எனக்கூறும் அமெரிக்க பிரதிநிதிகள்

4 டிசம்பர், 2012

வாஷிங்டன்: குஜராத் முதலைமைச்சர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க செல்வதற்கான விசாவை வழங்கக்கூடாது என அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் 25 அமெரிக்க பிரதிநிதிகள் தங்கள் நாட்டு உள்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

கடந்த 2005 மற்றும் 2008 ஆம் வருடங்களில் அமெரிக்காவில் அப்போதையை உள்துறை அமைச்சராக இருந்த காண்டோலிசா ரைஸுக்கு பல அமெரிக்க பிரதிநிதிகள் நரேந்திர மோடிக்கு அமெரிக்க விசா வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி கடிதம் ஒன்றை எழுதினர். இதனை ஏற்ற புஷ் அரசு மோடிக்கு விசா வழங்க மறுத்தது. தற்போது இந்தியாவில் அடுத்த பிரதமர் ஆகும் வாய்பு நரேந்திர மோடிக்கு இருப்பதாகவும், அதே சமயம் நரேந்திர மோடி பிற தலைவர்களுடனான சந்திப்பின் அடிப்படையில் மீண்டும் அவர் அமெரிக்க விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். எனவே அவரது விண்ணப்பத்தை அரசு ஏற்றுக்கொள்ளக்கூடாது என அவர்கள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

நரேந்திர மோடி முதலைமைச்சராக இருக்கும் குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு மோடி ஆதரவாக செயல்பட்டதும், அவரது பா.ஜ.க அரசு தான் இப்படுகொலைக்கு முழு காரணம். இதனால் அவரை கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய நீதி வழங்கப்படவில்லை என்பதனையும் அவர்கள் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்கள்.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010