அரசியல் கட்சிகளின் இலாபங்களுக்காக இந்தியா முழுவதும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத பழி சுமத்தப்பட்டு கைது செய்யப்படுவதும் அவர்களுக்கு ஜாமீன் கூட மறுக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகின்றது. அதோடு அவர்கள் மீது யு.ஏ.பி.ஏ. (சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டம்) போன்ற காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது.
இப்படி கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்களை விடுவிக்ககோரி சட்டப்படி பிணையில் விடு! அப்பாவிகளை விடுதலை செய்!! என்ற முழக்கத்துடன் ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் பிரச்சாரம் செய்து வருகிறது.
இப்பிரச்சாரத்தில் துண்டு பிரசுரங்கள் வினியோகித்தல், கையேடுகள் வினியோகம், போஸ்டர் பிரச்சாரம், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள், தெருமுனைக்கூட்டங்கள் போன்றவற்றை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சென்னை பெரியமேடு பேரக்ஸ் ரோடு பகுதியில் 09.09.12 அன்று மாலை 7 மணி அளவில் தெருமுனைப்பிரச்சாரம் மாவட்டச் செயலாளர் உ. முஹம்மது ஷாஹித் தலைமையில் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் O.M. பக்கீர் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் எழும்பூர் தொகுதி தலைவர் புரசை மீரான் வாழ்த்துரை வழங்கினார். இதில் பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்ட பேச்சாளர் மவ்லலி ரிஸ்வான் ஷா அவர்கள் சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக பெரியமேடு பகுதி தொழில் அதிபர் பாஷா, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் எழும்பூர் தொகுதி இணைச் செயலாளர் பெரியமேடு ஃபஹிம் மற்றும் ஜமாத்தார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக பாப்புலர் ஃப்ரண்டின் செயல்வீரர் ஜக்கரியா நன்றியுரையாற்றினார்.

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக