ஸ்ரீகாந்த் புரோஹித் |
மஹாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் கடந்த 2008 ஆம் ஆண்டு சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் பலர் கொல்லப்பட்டனர். வழக்கம் போல் இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியது பாகிஸ்தான் தீவிரவாதிகள் எனவும், ஐ.எஸ்.ஐ எனவும், முஸ்லிம்கள் தான் இந்த குண்டுவெடிப்பிற்கு காரணம் என்ற கோணத்திலேயே விசாரணைகள் நடைபெற்றது.
மேலும் பல அப்பாவி முஸ்லிம் இளைஞர்களும் விசாரணை என்ற பெயரி சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்.
பத்திரிக்கைகளும் ஆதாரமற்ற செய்திகளையே பிரசுரித்து வந்தது. ஆனால் சில நேர்மையான அதிகாரிகளின் தீவிரமான விசாரணையால் உண்மை குற்றவாளிகளை கண்டு பிடித்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச்சேர்ந்த பெண் சாமியார் பிரக்யா சிங் என்றும் அவருக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டது முன்னால் இராணுவ அதிகாரி ஸ்ரீகாந்த் புரோஹித் மற்றும் பலர் என தெரியவந்தது. இந்நிலையில் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இன்னும் பல தகவல்கள் வெளிவராத நிலையில் தேசிய புலனாய்வுக்குழு இன்னும் எட்டு நாட்களுக்கு குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீகாந்த் புரோஹித்திடம் விசாரணை மேற்கொள்ள இருக்கிறது.

ஹிந்துத்துவா பெண் தீவிரவாதி பிரக்யா சிங் |
ஸ்ரீகாந்த் புரோஹித், தயானந்த பாண்டே, ரமேஷ் உபாத்யா ஆகிய மூவரையும் மஹாராஷ்டிரா சிறப்பு காவல் படையின் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை நடத்துவதற்கு சிறப்பு நீதி மன்றம் அதிகாரம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தான் மஹாராஷிரா மாநில தீவிரவாத எதிர்ப்பு படையினரிடம் இருந்து தேசிய புலனாய்வுக்குழு இந்த வழக்கின் விசாரணையை பொறுப்பேற்றுக்கொண்டது. என்.ஐ.ஏ தனது கட்டுப்பாட்டில் வைத்தே குற்றவாளிகளை விசாரணை நடத்துவதற்கு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது.
இந்திய இராணுவத்தில் பணியாற்றிய ஸ்ரீகாந்த் புரோஹித் தான் முதல் குற்றவாளியாக இவ்வழக்கில் சேர்க்கப்பட்டார். முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியான மாலேகானில் சுக்கா பஜார் பகுதியில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளார்.
திவிரவாத எதிர்ப்பு படையினர் தங்களது குற்றப்பத்திரிக்கையில் புரோஹித் மற்றும் 11 நபர்கள் திட்டமிட்டு மாலேகானில் இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளதாக குறிப்பிட்டிருந்தது. இந்த குண்டுவெடிப்பின் போது 6 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த அதே ஆண்டு நவம்பர் மாதம் மத்திய பிரதேச மாநிலத்தில் வைத்து புரோஹித் கைது செய்யப்பட்டார்.
வெடிபொருட்களை அவரே வாங்கியதாகவும், ஹிந்துத்துவாவின் தீவிரவாத அமைப்பான் அபினவ் பாரத் என்னும் இயக்கத்தின் மூத்த தலைவராகவும் இருந்தார் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்னும் இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இருவர் தலைமறைவாகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக