புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

மோடிக்கு எதிரான கலவர வழக்கு - உச்சநீதிமன்றம் கண்காணிக்க மறுப்பு!

13 செப்டம்பர், 2011

2002 ல் நடைபெற்ற குஜராத் கலவரத்தின்போது,மாநிலம் முழுவதும் முஸ்லிம்கள் மீது இந்துத்துவாவினர் தாக்குதல் நடத்தினர். மேலும் முஸ்லிம்களின் வீடுகள், சொத்துக்கள், உடமைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

 
முஸ்லிம் பெண்கள் கற்பழிக்கப்பட்டும், குழந்தைகள், முதியவர்கள் எனப் பலரும் வெட்டிக்கொல்லப்பட்டனர். 3000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இந்துத்துவாவினரால் கொல்லப்பட்டனர். முஸ்லிம்களுக்கு எதிரான இக்கலவரத்தில், மிகக் கொடூரமாக கொல்லப்பட்டவர்களில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரியும் ஒருவராவார். கணவனை இழந்த இவரது மனைவி, ஜகியா ஜாப்ரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
அதில் அவர், குஜராத் மாநில முதல்- மந்திரி நரேந்திரமோடி, மாநில மக்களையும், உடமைகளையும் பாதுகாக்க தவறிவிட்டார்.




அதோடு மாநிலத்தில் நடந்துள்ள இனக்கலவரத்துக்கு துணை போய் உள்ளார்.
இது தொடர்பாக மோடி உள்பட 72 பேரிடம் விசாரிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இதையடுத்து முன்னாள் சிபிஐ இயக்குனர், ராகவன் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு ஒன்றை உச்ச நீதிமன்றம் நியமித்தது.
இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 



தீர்ப்பு விவரம் வருமாறு:-



2002-ம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பான வழக்குகளில், இனிமேலும் எந்த கண்காணிப்பும் தேவை இல்லை. கலவரத்தை ஒடுக்க நரேந்திரமோடி எதுவும் செய்யவில்லை, என்ற குற்றச்சாட்டு தொடர்பாக, மோடி மீது எந்த தீர்ப்பும் சொல்லப்பட வேண்டியது இல்லை. இஷான் ஜாப்ரி கொலை வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு, தனது இறுதி அறிக்கையை மாஜிஸ்திரேட் கீழ்க்கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையை ஆய்வு செய்து, நரேந்திரமோடி மற்றும் 63 பேர் மீது கலவர வழக்குகளை தொடர்ந்து நடத்துவதா? வேண்டாமா? என்பதை மாஜிஸ்திரேட் முடிவு செய்யலாம். இவ்வாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2002 ல் நடைபெற்ற குஜராத் கலவரத்தின்போது, இந்து கலவரக் கும்பலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம், என்று முதலமைச்சர் நரேந்திர மோடி, அப்போது காவல்துறைக்கு உத்தரவிட்டதாக, மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

சஞ்சீவ் பட் என்ற அந்த ஐபிஎஸ் அதிகாரி கூறியதாவது:


2002 பிப்ரவரி 27 ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப்பிறகு பின்னர், உடனடியாக சட்டம் ஒழுங்கு குறித்து விவாதிக்க, கூட்டப்பட்ட உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட காவல்துறை அதிகாரிகளிடம், இஸ்லாமியர்களுக்கு எதிரான தங்களது கோபத்தை தீர்த்துக் கொள்ள, இந்துக்களை அனுமதிக்க வேண்டும், என்று முதலமைச்சர் நரேந்திர மோடி உத்தரவிட்டார்.



முஸ்லீம்களுக்கு இந்த முறை பாடம் கற்றுக் கொடுப்பதற்கான உத்தரவை, சூழ்நிலை ஏற்படுத்தியுள்ளது, என்று மோடி கூறினார். இந்துக்கள் மத்தியில் காணப்படும் மிக அதிக உணர்ச்சி, கொந்தளிப்பு தவிர்க்க முடியாதது என்பதால், அவர்களை பழி தீர்த்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும், என்று முதலமைச்சர் நரேந்திர மோடி கூறினார். - சஞ்சீவ் பட் ஐ.பி.எஸ் ......



இவ்வளவு பகிரங்க குற்றவாளியை, உச்ச நீதிமன்றம் கண்காணிக்க முடியாது, என்று கைவிரித்து விட்டது. ஆனால் இந்த நாட்டின் 30 கோடி இந்திய முஸ்லிம்களும், மனிதாபிமானமுள்ள கோடிக்கணக்கான இந்தியர்களும், கண்டிப்பாக நரேந்திரமோடி போன்றவர்களை கண்காணிப்பார்கள். உயிரோடு தீயிட்டுக் கொளுத்தப்பட்ட, முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரியின் மனைவி ஸாகியா ஜாப்ரி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவின் அடிப்படையில் வழக்கு நடந்து வந்தது. இந்தத் தீர்ப்பு குறித்து ஜாப்ரி கூறுகையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. சிறப்பு விசாரணைக்குழு, முறையாக விசாரிக்கவில்லை என்றார்.


நன்றி: மறுப்பு.இன்

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010