ஊழலுக்கு எதிராக அத்வானி நடத்த இருக்கும் ரத யாத்திரைக்கு தடைவிதிக்க வேண்டும் என மத்திய அரசை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்துகிறது. அதன் அடிப்படையில் கர்நாடகா மாநிலத்தில் செயல்படும் பல அமைப்புகளை ஒன்றினைத்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்து அதன் மூலம் தங்களது கருத்தினை பதிவு செய்துள்ளனர்.
விரிவான செய்தி
சமீபத்தில் நாளிதழ் ஒன்றில் கேலிச்சித்திரம் ஒன்று பிரசுரிக்கப்பட்டது. அதில் கர்நாடக மாநிலத்தின் முன்னால் முதலமைச்சரும் ஊழலில் சிக்கி சின்னாபின்னாமாகிப்போன மிஸ்டர் எடியூரப்பா அத்வானியிடம் "ரத யாத்திரைக்கு டிரைவர் வேண்டுமா? " என்று கேட்பது போல் கேலிச்சித்திர வெளியானது. அத்வானி நடத்த இருக்கின்ற ரத யாத்திரையை நையாண்டி செய்யும் முகமாக இந்த கேலிச்சித்திரம் வெளியிடப்பட்ட்டது மட்டுமல்லாமல், உண்மையை உரக்க சொல்லியுள்ளது அந்த நாளிதழ்.
இந்தியாவை நேசிக்கக்கூடிய ஒவ்வொரு இந்திய குடிமகனும் இந்த தேசத்திலிருந்து ஊழலை ஒழித்திடவேண்டும் என எண்ணுகின்றான். ஆனால் இன்றோ ஊழலுக்கு எதிராக போராடுகிறோம் என்று கூறுபவர்கள் அனைவரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி நிரூபிக்கப்பட்டு சிறைதண்டனை அனுபவித்து வரும் வேலையில் இந்தியாவில் இருந்து எவ்வாறு ஊழலை ஒழிக்க இயலும்?
பாபா ராம்தேவ் போன்ற பிரபலங்கள் ஊழலுக்கு எதிராக போராடுகிறோம் என்கிறார்கள். ஆனால் இது ஆடுகளை பாதுகப்பதற்காக ஓநாய்களை ஏற்பாடுசெய்வது போன்று இருக்கிறது இவர்களது போராட்டம்.
இப்படிப்பட்ட போராட்டங்களினால் எந்த ஒரு மாற்றமும் ஏற்படப்போவதில்லை. இதனால் வரை இத்தகைய போராட்டங்களில் ஊழலால் உண்மையாக பாதிக்கப்பட்ட எவறும் கலந்து கொண்டதாக தெரியவில்லை. ஏழை முஸ்லிம்கள், பலஹீனமான கிருத்தவர்கள், அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்ட எந்த தலித்தும் இதில் பங்கெடுத்ததாக தெரியவில்லை. ஆக ஊழலுக்கு எதிரான போராட்டம் என்கின்ற பெயரில் ஏற்பட்டிருக்கும் இந்த கிளர்ச்சியால் பயன் அடைபவர்கள் யார்? எதற்காக இத்தகைய போராட்டங்கள் நடத்தப்படுகிறது? போன்ற கேள்விகள் எழுகிறது. ஊழலுக்கு எதிராக ரதயாத்திரை நடத்த இருக்கும் அத்வானியை நோக்கியும் சில கேள்விகள் கேட்கப்படவேண்டியுள்ளது.
இதற்கு முன்பாக இந்தியாவில் இதே அத்வானி செங்கல் யாத்திரை, ரத யாத்திரை என்கின்ற பெயரில் பல யாத்திரைகளை நடத்தி இந்திய மக்களை முட்டாளாக்கியுள்ளனர். இந்திய மக்கள் இவர்கள் நடத்தும் யாத்திரைகளைக் கண்டு வெறுப்படைந்துள்ளனர். மேலும் இவர்கள் நடத்தும் யாத்திரைகளில் பெரும்பாலான மக்கள் ஆதரவு கொடுத்ததில்லை. இந்த வகுப்புவாத சக்திகள் நடத்தும் ர(த்)த யாத்திரையினால் வகுப்புவாதம் தலை தூக்கி பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்கள் அநியாயமாக பறிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் நடத்தும் இந்த ரத யாத்திரை ஊழலை எதிர்ப்பதற்காக அல்ல, மாறாக இந்திய மக்களிடம் செல்வாக்கை இழந்த பா.ஜ.கவின் ஆட்சியை மீண்டும் அமைப்பதற்காகவே இது போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
இதற்கு முன்பாக பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு முன்பு அத்வானி நடத்திய ரத யாத்திரையினால் வகுப்புவாத கலவரம் ஏற்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர், கோடிக்கணக்கான சொத்துக்கள் சூரையாடப்பட்டது. இத்தகைய பாதிப்பை ஏற்படுத்திய இவர்கள் மீண்டும் ரதயாத்திரை என்கின்ற பெயரில் வகுப்புவாதத்தை தூண்ட முயற்ச்சி செய்கின்றனர். மீண்டும் ஒரு முறை மக்களை முட்டாளாக்கும் வேலைகளில் இறங்கியுள்ளனர். இவர்கள் நடத்திய ரதயாத்திரையினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இவர்கள் முழு பொறுப்பு ஏற்றுக்கொள்ளவேண்டும்.
இவர்கள் நடத்தப்போகும் இந்த ரதயாத்திரைக்கு தடைவிதிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகின்றோம். மத்திய அரசு இவர்களுக்கு அனுமதி வழங்கி அதன் மூலம் வன்முறை ஏற்பட்டால் அதற்கு அவர்கள் தான் பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும்.
ஊழலுக்கு எதிராக போராடுகிறோம் என்று கூறும் இவர்கள், ஜாதிக்கொடுமைகளுக்கு எதிராகவோ, தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராகவோ, பட்டினிக்கொடுமைகளுக்கு எதிராகவோ, மக்கள் இழிவுபடுத்தப்படுவதற்கு எதிராகவோ, மனித உரிமை மீறக்களுக்கு எதிராகவோ, சிறுபான்மை மற்றும் தலித் சமூகத்திற்கு எதிராக நடத்தப்படும் குற்றங்களுக்கு எதிராக இவர்கள் போராடியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் போது கலந்து கொண்டவர்கள் விபரம் வருமாறு:
2. லக்ஷ்மண் (தலைவர், ஜாதி வினாசா வேதிகா, கர்நாடகா)
3. சந்திர சேகர் (செயலாளர், தலித் பேந்தர்ஸ் ஆஃப் இந்தியா, கர்நாடகா)
4. மெளலான உஸ்மான் பேக் (தேசிய தலைவர், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்)
5. பேராயர் மனோகர் சந்திர பிரசாத் (தலித் கிருத்தவ உக்கூட்டா, கர்நாடகா)
6. மெளலானா செய்யது சைபுல்லாஹ் (ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்)
7. பி. அஞ்சப்பா (ஆசிரியர், அக்னி அஸ்திர பத்திரிக்கை, பெங்களூர்).
8. ந. கங்கப்பா (மதிக மீசலதி ஹொரதா சமிதி, கர்நாடகா)
9. பேராசிரியர் நாகர்ஜரி ரமேஷ் (ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், நேஷனல் கல்லூரி, பெங்களூர்)
10. மெளாலானா ஜாஹித் அஹமது (பொதுச்செயலாளர், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில், கர்நாடகா)
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக