ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் முஸ்லிம்கள் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு காட்டு மிராண்டித்தனமானட்தும் , போலீஸார் முஸ்லிம்களுக்கெதிராக காட்டிவரும் பாரபட்சத்தின் வெளிப்பாடுமாகும்.
பல இயக்கங்களின் ஆரம்பக்கட்ட விசாரணையின்படி போலீஸாரின் அணுகுமுறை மற்றும் அதிகப்படியான போலீஸ் குவிக்கப்பட்டது ஆகியவையே பிரச்சனை மிகவும் மோசமாக்கியுள்ளது. உள்ளூர் பஞ்சாயத்தினால் தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய பிரச்சனை காவல்துறையின் தலையீட்டால் பலர் உயிரிழக்க காரணமாக அமைந்து விட்டது.
பாரத்பூரில் நடந்தது ஏதோ அறியாமல் நடந்த அரிதான சம்பவம் என்று கறுதுவதிற்கில்லை, இதற்கு முன்பு நடந்த சம்பவங்களில் தொடர்ச்சிதான் இது. முஸ்லிம்களுக்கெதிரான காவல்துறையின் அத்துமீறல் என்பது இந்தியாவில் புதிதான நிகழ்வு அல்ல என்பதும் சமீபத்தில் பீஹார் மாநிலம் போர்ப்ஸ் கஞ்சில் முஸ்லிம்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்துவிட்ட அராஜகம் இந்த வரிசையைச் சேர்ந்ததுதான் என்பதையும் மீண்டும் நினைவு படுத்துகின்றோம்.
இந்திய காவல்துறை இதுபோன்ற மதவாதத்தை வெளிப்படுத்தும் அணுகு முறை மிகவும் ஆபத்தானதும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியதும் ஆகும்.
இது போன்ற பல நிகழ்வுகள் நடந்திருந்த போதிலும் அனைத்து நிகழ்வுகளிலும் காவல்துறையினர் தண்டிக்கப்படாமல் லாவமாக தப்பிவிடுகின்றனர்.
ராஜஸ்தானில் அப்பாவி முஸ்லிம்கள் மீது கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட போலீஸ் துப்பாக்கிச் சூட்டை வன்மையாக கண்டிக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துப்பாக்கி சூட்டிற்கு காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ராஜஸ்தான் அரசை வலியுறுத்துகின்றது.
ராஜஸ்தானின் இதர பாகங்களுக்கு பரவி வரும் கலவரத்தை தடுக்க முடியாது திணறி வருவதை பார்க்கும் போது கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வரும் அளவிற்கு ராஜஸ்தான் அரசிடம் திறன் இல்லை என்பதையே காட்டுகிறது.
எனவே மத்திய அரசு இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து பாரத்பூர் மக்கள் அமைதி, பாதுகாப்புடன் வாழ வழி செய்யவேண்டும், அதே போல்
பாரத்பூர் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய அரசு செய்து தரவேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக