புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

இடிந்தகரை போராட்டக்காரர்களை பலவந்தப்படுத்தும் அரசுகள்

21 மார்ச், 2012



இடிந்தகரை: தமிழக அரசு சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற விவாதத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பணிகள் தொடங்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இடிந்தகரையில் பல மாதங்களாக போராடி வரும் அணு உலை எதிர்பாளர்கள் 18 நபர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழுவினர்
ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என 5000ற்கும் மேற்பட்ட மக்கள் புனித லூடிஸ் தேவாலயம் அருகே நேற்று இரவு உறங்கிக்கொண்டிருந்தார்கள். பேராயர் சுசீலன் உட்பட 185ற்கும் மேற்பட்ட மக்கள் காவல்துறையின் அராஜகத்தை எதிர்த்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருந்த போது கூட்டபுலி கிராமத்தில் வைத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட நெல்லை சிறப்பு காவல்படை முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

போராட்டக்குழுவின் உறுப்பினர்களான வழக்கறிஞர் சிவசுப்பிரமணியன் மற்றும் ராஜலிங்கம் உட்பட 9 நபர்கள் 121, 121 அ மற்றும் 153 அ பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு மறைமுகமான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் முகிலன் மற்றும் மன்னே ஆகிய இருவரும் இடிந்தகரை செல்லும் வழியில் அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இடிந்தகரை கிராமத்தில் தடை எண் 144 (ஊரடங்கு உத்தரவு) பிரப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டப் பகுதிக்குள் மக்களை நுழையவிடாமல் காவல்துறையினர் தடுத்து வருகின்றனர். அப்பகுதிக்கும் மக்கள் எவ்வித கூட்டத்தையும் வரவிடாமல் காவல்துறையினர் தடுத்து வருகின்றனர். இருந்த போதிலும் கடல்வழியாக படகின் மூலமாக கால்நடையாகவும் மக்கள் இடிந்தகரை கிராமத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர்.


அணு உலை எதிர்ப்பு போராட்டக்காரர்களின் தலைவர் டாக்டர் எஸ்.பி. உதயகுமார் தலைமயில் அப்பகுதி மக்கள் உண்ணாவிரத போராட்டத்தை நேற்று முதல் தொடங்கியுள்ளனர். கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை வாபஸ் பெற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த 2008 ஆம் ஆண்டு இந்திய அரசு மற்றும் ரஷிய அரசிற்குமிடையே கூடங்குளம் அணு உலை ஏற்படுத்துவதற்கான் ஒப்பந்தம் ரகசியமாக கையெழுத்தானது. கூடங்களத்தை சுற்றியுள்ள 30 கீமி சுற்றளவில் இது தொடர்பாக பாதுகாப்பு மற்றும் வெளியேற்றுவதற்கான பயிற்ச்சிகள் நடத்தப்படவேண்டும் என அந்த ஒப்பந்தத்தில் குறிபிடப்பட்டிருந்தது.

தமிழக அரசின் கூடுதல் காவல்துறை ஆணையர்,  3 துணை ஆணையர்கள், 20 உயர் காவல்துறை அதிகாரிகள் தலைமையில் ஆயுதம் ஏந்திய 6000 காவலர்கள் கூடங்குளத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இடிந்தகரை கிராமத்தில் தற்போது சுகாதாரம் மற்றும் உணவு பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்புகள் இருக்கிறது. உள்ளூர் மக்களின் உயிர்களுக்கு மதிப்பளிக்காமல் பலவந்தப்படுத்தி அணு உலைகளை ஏற்படுத்த நினைக்கும் அரசாங்கத்தின் போக்கை வன்மையாக கண்டிப்பதோடு மட்டுமல்லாமல் மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென போராட்டக்குழுவினர் தமிழக மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

இடிந்தகரை மக்களின் சம்மதத்துடனேயே அணு உலை ஏற்படுத்தப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் முன்னர் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் பல்வேறு தரப்பட்ட விஞ்ஞானிகளை இடிந்தகரை கிராமத்திற்கு அனுப்பி மக்களை சம்மதிக்க வைக்க அரசு எவ்வளவோ முயற்ச்சித்தும் பலன் அளிக்காதத்தால் தற்போது மக்களை பலவந்தப்படுத்தும் போக்கினை மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடங்கியுள்ளது.

மக்கள் என்று தங்களுக்காக வாக்களித்து, தங்களுடைய நலனிற்கு மதிப்பளிக்கக்கூடியவர்களுக்கு வாக்களித்தால் மட்டுமே உண்மையான ஜனநாயக ஆட்சி மலரும். அதை விடுத்து பாரம்பரிய கட்சிகளுக்கும், சினிமா காரர்களுக்கு வாக்களித்தால் மக்களுக்கு விமோட்சனம் கிடைக்கப்போவதில்லை என்பதே உண்மை.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010