புதுடெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்பாக அவதூறு
செய்திகள் வெளியிட்ட 9 பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் இந்திய பத்திரிகை
சங்கத்திற்கு மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டுமென
பத்திரிகை கவுன்சிலின் சார்பாக 9 பத்திரிகைகளுக்கும் நோட்டீஸ்
அனுப்பப்பட்டுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மீது களங்கத்தை
ஏற்படுத்தும் விதத்தில் சில பத்திரிகைகள் அவதூறு செய்திகளை
வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக 11 நாளிதழ்கள் மற்றும் 2 செய்தி சேனல்கள்
மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்
பொதுச்செயலாளர் கே.எம். ஷரீஃப் அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் இந்திய
பத்திரிகை கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்பினார். இவ்வனைத்து
பத்திரிகைகளுக்கும் சட்டரீதியான நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் இது தொடர்பாக
எந்த விளக்கமும் அளிக்காததால் பத்திரிகை கவுன்சிலின் கவனத்திற்கு கொண்டு
செல்லப்பட்டது.
11 நாளிதழ்கள் மேல் கொடுக்கப்பட்ட புகாரின் படி முதற்கட்டமாக 9
நாளிதழ்களுக்கு பத்திரிகை கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தைனிக்
ஜக்ரன் (ஹிந்தி, உத்திர பிரதேசம்), தைனிக் ஜக்ரன் (ஹிந்தி, புதுடெல்லி),
ஹிந்துஸ்தான் டைம்ஸ் (ஆங்கிலம், உத்திரபிரதேசம்), தி ஏசியன் ஏஜ் (ஆங்கிலம்,
டெல்லி), டெக்கன் கிரோனிக்கல் (ஆங்கிலம், கேரளா), நவ பாரத் டைம்ஸ்
(ஹிந்தி, டெல்லி), தி இன்குலாப் (உருது, டெல்லி), தி நியு இந்தியன்
எக்ஸ்பிரஸ் (ஆங்கிலம், கேரளா), தி சன்டே கார்டியன் (ஆங்கிலம், டெல்லி),
ஆகிய பத்திரிகைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக
நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அப்பத்திரிகைகளின் பதிலை எதிர்பார்த்து
பத்திரிகை கவுன்சில் காத்திருக்கின்றது.
பயோனிர் மற்றும் சண்டே பயோனிர் ஆகிய இரு பத்திரிகைகள்
தொடர்பான புகார்களை இன்னும் பத்திரிகை கவுன்சில் நிலுவையில் வைத்துள்ளது.
செய்தி சேனல்கள் மற்றும் இணையதளங்களில் செயல்படும் ஊடகங்கள் அனைத்தும்
பத்திரிகை கவுன்சிலின் கீழ் வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த
போதிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இது தொடர்பாக சட்டரீதியான
நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக