பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சென்னை மாவட்டம் சார்பாக வருகின்ற டிசம்பர் 6 மாலை 7 மணியளவில் பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு வண்ணாரப்பேட்டை மற்றும் புதுப்பேட்டையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
அயோத்தியில் 1992 டிசம்பர் 6 அன்று ஃபாசிஸ பயங்கரவாதிகளால் நன்கு திட்டமிடப்பட்டு பாபரி மஸ்ஜித் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு பாபரி மஸ்ஜிதை அதே இடத்தில் மீண்டும் கட்டி தருவோம் என வாக்குறுதி அளித்தது. கடந்த 2010ஆம் வருடம் பாபரி மஸ்ஜித் தொடர்பான தீர்ப்பை அலஹபாத் உயர் நீதிமன்றம் வழங்கியது. இத்தீர்ப்பிற்கு பல தரப்பட்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் வழக்குறைஞர்களிடமிருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அலஹாபாத் வழங்கிய தீர்ப்பிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாபரி மஸ்ஜித் தொடர்பான உண்மையை தலைமுறை தலைமுறையாக கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பல விதமான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 20 ஆண்டுகள் கழிந்த நிலையில் அதனை இடித்த குற்றவாளிகளுக்கு எந்தவித தண்டனையும் வழங்கப்படவில்லை அதே சமயம் பாபரி மஸ்ஜித் மீண்டும் கட்டப்படவும் இல்லை. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பாபரி மஸ்ஜித் தொடர்பான போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபடும் என்பதை தெரிவித்துக்கொள்வதோடு வருகின்ற டிசம்பர் 6 மாலை 7 மணியளவில் புதுப்பேட்டையில் நடைபெறவிருக்கின்ற பொதுக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில், சந்தே டிவி புகழ் வீரபாண்டியன், நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜரீனா பேகம் ஆகியோரும், வண்ணாரப்பேட்டையில் நடைபெறவிருக்கின்ற கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்டின் சென்னை மாவட்ட தலைவர் ஜே. முஹம்மது நாஜிம், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற மூத்த வழக்குறைஞர் முத்து கிருஷ்ணன், நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில பொதுச்செயலாளர் நஃபீஸா, எஸ்.டி.பி.ஐ கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் நேதாஜி ஜமால் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கின்றனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் இக்கூட்டத்திற்கு பெரும்திரளாக மக்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக