இப்படி சரணடைந்தவரை வேறொரு வழக்கு விசாரணைக்காக மானாமதுரை அழைத்துச் செல்லும் போது போலிஸாரை தாக்கிவிட்டு தப்பினார், அதன்பின் அவர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டனர் என்ற பழைய பாணியிலான கதையை கூறியுள்ளது காவல்துறை.
சப் இன்ஸ்பெக்டர் ஆல்வின் படுகொலை செய்யபட்டதை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. இந்தப்படுகொலைஐ செய்தவர் யாராக இருப்பினும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கபட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
அதே வேளையில் நீதி, நீதிமன்றம், விசாரணை என்பதையெல்லாம் காலில் போட்டு மிதித்துவிட்டு சட்டத்தை தன்கையில் எடுத்து என்கவுண்டர்களை நடத்தி வருவது என்பது நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகின்றதா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
சிவகங்கையில் நடந்த என்கவுண்டர் அதிச்சியையும் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இந்த் என்கவுண்டரை வன்மையாக கண்டிப்பதோடு இது விஷயத்தில் நியாயமான், முறையான விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்த அதிகாரிகள் தண்டிக்கபட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாநிலச் செயலாளர் முஹம்மது ஷேக் அன்சாரி பத்திரிகைகளுக்கு செய்தி அனுப்பியுள்ளார்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக